கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரில், ஐவர் குற்றவாளிகள் என்றும் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கோவை: கடந்த 2018 ஆம் ஆண்டு, கோவை தடாகம் சாலை வேளாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் 2,000 நோட்டுகளை ரூ.1.18 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் அடித்ததாக மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெராக்ஸ் இயந்திரம், கணினிகள் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இது வரை கோவையை சேர்ந்த ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், ஹரி, திருப்பூரை சேர்ந்த விஜயகுமார், உதயபிரகாஷ், ராஜேஷ் ஆகிய 7 பேரை கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆனந்த உட்பட 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தீர்ப்பு விபரம்:

ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், உதயபிரகாஷ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம், விஜயகுமார் என்பவருக்கு 7 ஆண்டு சிறை 7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் கைது செய்யப்பட்ட, ஹரி, ராஜேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...