அதிக வட்டி தருவதாக கூறி கோடி கணக்கில் நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் - பா.ம.க நிர்வாகி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு..!

அதிக வட்டி தருவதாக கூறி உடன் வேலை செய்பவர்களிடம் பல லட்சம் வாங்கிக்‌ கொண்டு ஏமாற்றியது தொடர்பான பாமக நிர்வாகியின் புகாரின் பேரில், ரேணு பிரியா என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட ரேணுபிரியா என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்ட பாமக செயலாளராக இருந்து வருபவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், ரேணுபிரியா என்ற பெண் தன்னுடன்‌ வேலை. செய்யும்‌ நபர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் வாங்கிக்‌ கொண்டு ஏமாற்றி உள்ளார்.

பணம் கொடுத்தவர்கள்‌ ரேணுபிரியாவிடம் பணத்தை திரும்ப கேட்டால், காங்கிரஸ்‌ கட்சியின்‌ மாநில பொதுச்‌ செயலாளர்‌ சுந்தர்‌ என்பவரை வைத்து மிரட்டி வருகிறார்‌.

கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ள இந்த பெண் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் சுந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியா தற்போது திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியாவை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...