பணத்தை திருப்பி கேட்டதால், சமையல்காரரை பீர் பாட்டிலால் குத்திய ஆறுமுகத்தை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் முருகானந்தம் (31). இவர் நஞ்சுண்டாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், சமையல்காரராகவும் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) என்பவருக்கு ரூ. 8 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். ஆனால், ஆறுமுகம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று, முருகானந்தம் பணத்தை திருப்பி கேட்டதால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பீர் பாட்டிலை உடைத்து முருகானந்தத்தின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடனை திருப்பி கேட்ட சமையல்காரரை பீர் பாட்டிலால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.