தமிழகத்திலேயே, கோவை சரகத்தில் தான் 15 மாதங்களில் 75 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது - போலீசாருக்கு டி.ஐ.ஜி., முத்துசாமி பாராட்டு..!

கொரோனா தொற்று காலத்தில், சிறப்பான பணியாற்றியதற்காக கோவை டி.ஐ.ஜி, முத்துசாமிக்கு ரோட்டரி சங்கம் சார்பாக விருது, வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய டி.ஐ.ஜி. முத்துசாமி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை சரகத்தில் தான், 75 போக்சோ வழக்குகளில், தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது, என்றார்.


கோவை: கோவை சரகத்தில் கடந்த 15 மாதங்களில், 75 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில், சிறப்பான பணியாற்றியமைக்கான கோவை டி.ஐ.ஜி., முத்துசாமிக்கு ரோட்டரி கிளப் சார்பாக விருது, வழங்கப்பட்டது. கோவை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் பிரபு, செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் இவ்விருதை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய டி.ஐ.ஜி முத்துசாமி, ரோட்டரி சங்கம் வழங்கிய இந்த விருது, கோவை சரகத்துக்கு கிடைத்த அங்கீகாரம். 4 எஸ்.பி.,க்கள், ஆயிரக்கணக்கான போலீசாரின் பணிக்கு கிடைத்த பாராட்டாக இதை கருதுகிறேன்.

கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணியை காட்டிலும், 'போக்சோ' வழக்குகளில் கோவை சரக போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை சரகத்தில் தான், 75 போக்சோ வழக்குகளில், தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதுவும், 20 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்கிய 50 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இரு வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், விருதும் ஊக்கப்பரிசும் வழங்கப்படும் என்று, அறிவிப்பு வெளியிட்டேன். அதன்படி, 10 இன்ஸ்பெக்டர்கள், சிறப்பாக பணியாற்றி விருது பெற்றுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதில், கோவை சரகம் முன்னணியில் உள்ளது. ரோட்டரி சங்கத்தின் விருதும், பாராட்டும், இந்த சரகத்தில் பணியாற்றும் காவலர் முதல் எஸ்.பி., வரை அனைவருக்கும் உரியதாகும்.

இவ்வாறு, டி.ஐ.ஜி. பேசினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...