10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: நீர் உந்து நிலையத்தில் வார்டு 12, 13, 14 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, சின்ன மேட்டுபாளையம் நீர் உந்து நிலையத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து சின்னமேட்டுபாளையம் நீர் உந்து நிலையத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



குறிப்பாக வெள்ளக்கிணறு, உடையம்பாளையம், நஞ்சை கவுண்டம்புதூர், சுப்பநாயக்கன்புதூர், சின்ன மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீர்மானிக்கப்பட்ட குடிநீர் குறை இல்லாமல் வழங்கிடக் கோரி மாமன்ற உறுப்பினர்கள், 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் சின்னமேட்டுப்பாளையம் நீர் உந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாமன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...