கோவையில் பரபரப்பு..! ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்..!

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு மற்றும் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து 9 மாணவிகள் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.



மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் 3 பேர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.



இதனை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...