வால்பாறை அருகே நலிவுற்ற நிலையில் மீட்கப்பட்டு, வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டு வந்த புலிக்கு பல் அறுவை சிகிச்சை..!

கடந்த ஆண்டு நலிவுற்ற நிலையில் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், தானாகவே வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. புலியின் ஈறுகளில் உடைந்த பல் துண்டு சிக்கிக் கொண்டதால், 5 கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.


கோவை: வால்பாறை அருகே வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டு வந்த புலியின் வாயில் இருந்த உடைந்த பல் துண்டை கால்நடை மருத்துவர்கள்5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றினர்.

வால்பாறை அருகேயுள்ள முடீஸ் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உடல் நலிவுற்றநிலையில் புலிக்குட்டி ஒன்று நடமாடியது. அந்த புலிக்குட்டியை மானாம்பள்ளி வனத்துறையினர் வனக்குழுவினருடன் இணைந்துபத்திரமாக பிடித்தனர்.

இதனையடுத்து, புலிக்குட்டியை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் இருக்கும் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர். மேலும் அங்கு வைத்து புலிக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அங்கு வைத்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புலியை மானாம்பள்ளி வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தங்கும் விடுதிக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், புலிக்கு தானாகவே வேட்டையாடி சாப்பிடுவதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர்,இதற்காக தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக மந்திரிமட்டம் என்ற பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூண்டு அமைத்தனர்.

புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்து வந்தனர். புலியும் அவைகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தது.

இதற்கிடையே, புலியின் உடல்நிலையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, புலிக்கு பல் வலி மற்றும் பல் ஈறுகளில் தொற்று இருப்பது தெரியவந்தது. உடைந்த பல் துண்டு ஒன்று ஈறுகளில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த பல் துண்டை அகற்றுவதற்குமுதன்மை வனவிலங்கு பாதுகாவலர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்கா, கால்நடை டாக்டர் ஸ்ரீதரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் சதாசிவம், மருத்துவர்கள் கோபிகிருஷ்ணா, ஞானவி பாக்கியம் ஆகியோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் 5 மணி நேரத்திற்கு மேலாக புலிக்கு அறுவை சிகிச்சை செய்து உடைந்த பல் துண்டை அகற்றினர்.

இதனையடுத்து, பல் சிக்கியிருந்த இடத்தில் ஏற்பட்டுள்ள துளையைபயோடென்டைன் கொண்டு அடைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர் கண்காணிப்புக்கு பிறகு உடல்நிலை மற்றும் பல் பரிசோதனை செய்த பின்னர், மீண்டும் புலியை கூண்டில் விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...