கணபதி அருகே வடமாநில இளைஞரை தாக்கி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 5 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே வடமாநில இளைஞரை தாக்கி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர்கள், சத்யேந்திர சிங், மகேந்திர சிங். சகோதரர்களான இவர்கள், கோவை கணபதி சங்கனுார் சாலையில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சத்யேந்தர், மகேந்தர் ஆகியோர் மது பாட்டில் வாங்கிக்கொண்டு அறைக்கு சென்றுள்ளனர்.அப்போது, அவர்களை வழி மறித்த இளைஞர் ஒருவர், 'நீங்கள் தமிழா, ஹிந்தியா' என்று விசாரித்துள்ளார்.'ஹிந்தி' என்று கூறியதும், அந்த நபரும் அவருடன் இருந்த நபர்களும் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும்,அவர்களிடம் இருந்த செல்போன், ரூ.4,000 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதில், காயமடைந்த இருவரும், சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சரவணம்பட்டி போலீசார், கணபதி முதல் வீதியை சேர்ந்த பிளாக்கி விஜய் (27), ஆறாவது வீதி பிரவின் குமார்(26), சின்னவேடம்பட்டி பிரவின்(25), பால் விக்டர் ஜோஸ்வா (27), மற்றும் காந்திபுரம் ராஜூ நாயுடு லே அவுட் அருண் பிரசாத்(24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும், வெவ்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில், மூவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதையறிந்த போலீசார், வழக்கு விசாரணையை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.