முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக, ஆட்சியின் போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், அரசியல் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே நடந்த விசாரணையில், குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள 2 எஃப்.ஐ.ஆர்களை (FIR) ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த மனுக்கள், அப்போது, தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''தனி நீதிபதி தான், மனுவை விசாரிக்க வேண்டும். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான ராஜு, இந்த வழக்கில் எப்படி ஆஜராகலாம்?'' என கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை, முதல் பெஞ்ச் நிராகரித்து, விசாரணையை செப்டம்பர் 19க்கு தள்ளி வைத்திருந்தது. ஆனால், இவ்வழக்கு, நேற்று விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.
இதனிடையே, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய முதல் பெஞ்ச் முன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி,வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி கோரினார். இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவுகள் வழங்கப்படலாம் என நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.