ஆனைகட்டி மலையின் விளிம்பில் கால் தவறி விழுந்து பெண் யானை உயிரிழந்த சோகம்.!

நேற்றிரவு அட்டப்பாடியில் உள்ள மலைப்பாதையின் விளிம்பில் யானைக்கூட்டம் நடந்து சென்ற போது, ஒரு பெண் யானை கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி விளிம்பில் கால் தவறி விழுந்து பெண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைக்கட்டி அடுத்த கேரளப்பகுதியான அட்டப்பாடி, அகலி, பசுமை பள்ளத்தாக்குப் பகுதியில் காட்டு யானைகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழ்நாடு - கேரள வனப்பகுதிக்குள் மாறி மாறி வருவது வழக்கம்.

இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள மலைப்பகுதி வழியாக யானைக்கூட்டம் ஒன்று நேற்று(செப்.18) இரவு வந்துள்ளது. அப்போது மலையின் விளிம்பில் யானைக்கூட்டம் சென்ற போது பெண் யானை ஒன்று கால் தவறி மலை பாதையின் பள்ளத்தில் விழுந்துள்ளது.

மலையில் இருந்து கீழே விழுந்த யானை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அட்டப்பாடி வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.

மேலும், கூட்டத்தில் இருந்த வேறு ஏதாவது யானை இதே போல், தவறி விழுந்துள்ளதா..? எனவும் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...