கோவை பேரூர் மாதம்பட்டி அருகே 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்…!

தங்கள் பகுதிக்கு சரிவர அரசு பேருந்து இயக்கப்டாததை கண்டித்து கோவை பேரூர் மாதம்பட்டி அருகே 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: கோவை பேரூர் அடுத்த கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல், உள்ளிட்ட கிராம பகுதிக்குள் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள், சரிவர இயக்கப்படாததாக அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.



இந்நிலையில் அரசு பேருந்துகளை கரடிமடை, சென்னனூர், மத்திபாளையம், தண்ணீர் பந்தல் பகுதிகளில் முறையாக இயக்க கோரியும், போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்தும் அப்பகுதி மக்கள் திடிரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்டாதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லக்கூடிய நேரங்களில் அரசு பேருந்துகள் வராததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று மாதம்பட்டி பகுதியில் பேருந்து ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோரும் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், உடனடியாக இந்த 4 கிராமங்களுக்கும் முறையாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.



தகவல் அறிந்து வந்த பேரூர் காவல்துறையினர் கிராம மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சமந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு பிரச்சனையை எடுத்து செல்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.



காலை நேரத்தில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டு அவ்வழியாக வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...