வால்பாறை அருகேயுள்ள இஞ்சிபாறை எஸ்டேட், லோயர் டிவிசன் பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் பால் சப்ளை செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவரை 2 கரடிகள் தாக்கியதில் கையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: வால்பாறை அருகே கரடிகள் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள இஞ்சிபாறை எஸ்டேட், லோயர் டிவிசன் பகுதியை சேர்ந்தவர் தங்கம்(53). இவர் எஸ்டேட் பகுதியில் மாடுகள் வளர்த்து வீடுகளுக்கு பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் வீடுகளுக்கு பால் கொடுக்க சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, தேயிலை தோட்டம் பகுதியில் இருந்த 2 கரடிகள் அவரை தாக்கி இடது கையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரைகாப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்தவனத்துறை சரகர் மணிகண்டனிடம் மருத்துவமனையில் நின்று இருந்த உறவினர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கூட்டத்தை கலைத்தனர்.