மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்யும் வகையில் சைக்கிள் கிளப் மற்றும் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - உதவி காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

நாட்டுக்கும், உடலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்க கூடிய போதைப் பொருள் பயன்பாடு குறித்து மாணவர்கள் 9498181212 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம் - உதவி காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்


கோவை:மருத்துவ மாணவர்கள் சைக்கிளில் சென்று கிராமங்களில் சேவை செய்ய வசதியாக கோவை தனியார் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சைக்கிள் கிளப்பை உதவி காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் துவங்கி வைத்தார்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள என்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரிவளாகத்தில் மருத்துவ மாணவர்கள் சைக்கிளில் சென்று சேவையாற்றிட வசதியாக சைக்கிள் கிளப் ஒன்றை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, இந்த சைக்கிள் கிளப்பின் துவக்க விழா மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மருத்துவ மாணவர்களின் சைக்கிள் கிளப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாணவர்களிடையே போதைப் பழக்கம் தற்போது அதிகரிப்பது வேதனைக்குரிய ஒன்று. சமுதாய சீரழிவுக்கு போதைப்பொருள் முக்கிய பங்களிக்கிறது. இவற்றை தடுக்க படிக்கும் மாணவ மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போதைப் பொருள் பயன்படுத்துவோரை கண்டறிந்து காவல்துறை கண்ட்ரோல் ரூம் தொடர்பு எண் 9498181212தகவல் தெரிவிக்கலாம். அழைப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும்.

சிறந்த சமுதாயம் உருவாக மாணவச் செல்வங்கள் தங்கள் படிக்கும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல், சமுதாயப்பணி இவற்றில் கவனம் செலுத்தலாம்."

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர்கள்,இந்தியன் ரயில்வே துறையின் பயிற்சித்துறை மேலாளர், தமிழ்நாடு சைக்கிள் கிளப் அசோசியேசன் பயிற்சியாளர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...