பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த கோவை தனியார் நிறுவன ஊழியர்; போலீசார் விசாரணை

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பவர் நண்பர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இரவு மது அருந்திய நிலையில், காலையில் அவரது நண்பர்கள் பார்த்த போது, நீச்சல் குளத்தில் இறந்த நிலையில் தலைகுப்புற கிடந்துள்ளார்.



கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34) இவர், தனியார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று சீனிவாசன் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்குவதற்காக நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், இன்று காலை சீனிவாசனை மட்டும் காணாததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தேகத்தின் பேரில் நீச்சல் குளத்தில் அவரை தேடி பார்த்த போது தலை குப்புற நிலையில் சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை உடனடியாக தண்ணீரில் இருந்து மீட்டு, இது குறித்து கோவையில் வசிக்கும் சீனிவாசனின் தந்தை ஆனந்த நாராயணனுக்கு நண்பர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...