கோவையில் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் - வானதி சீனிவாசன்

ஆட்சி அமைந்து பல மாதங்கள் ஆகியும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. கேட்டால் டெண்டர் வரவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாங்கள் முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.



கோவை: குப்பைகள் அகற்றப்படாமல், கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் கொசுக்கள் அதிகமாகி பல்வேறு காய்ச்சல்கள் பரவ காரணமாக உள்ளது. ஆட்சி அமைத்து பல நாட்கள் ஆகியும், இன்னும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை, கேட்டால் மருந்துகள் ஸ்டாக் இல்லை என்றும் டெண்டர் வரவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், மறு புறம் திமுக அமைச்சர்கள் இது முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் என்று கோவையில் வானதி சீனிவாசன் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமலிங்க காலனியில் பா.ஜ.க வின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில், கலந்து கொண்ட பயனாளிகளிடம், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துரையாடினார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்க்கான காரணத்தை தடுக்காமல், தற்காலிக நடவடிக்கையை அரசு செய்து வருகிறது

குப்பைகள் அகற்றப்படாமல், கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் நோய்கள் பரவ காரணமாக அமைகிறது. ஆட்சி அமைத்து பல நாட்கள் ஆகியும், இன்னும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. கேட்டால் டெண்டர் வரவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நாங்கள் முன் மாதிரியான அரசு என்று வாய் சவுடால் அடிக்கிறார்கள் திமுக அமைச்சர்கள்.

உடனடியாக அரசு பள்ளிகள் மற்றும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ள குடிசை பகுதிகளில் தேவையான மருத்துவ முகாமைக் ஏற்படுத்த வேண்டும்.

கோவையில் உள்ள வாலாங்குளத்தில் டீசல் படகு சவாரி விடுவதால் அங்கு மீன்கள் செத்து மிதக்கிறது. கோவையில் ஆமை வேகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

கோவை தெற்கு தொகுதியில் கமல் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். அப்போது, கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன் என்று மக்களிடம் சொல்லியிருக்கிறார். நான் வேண்டுமானால் எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது.என்று லிஸ்ட் தருகிறேன், அதையெல்லாம் தீர்த்து வைக்கட்டும்.

அவர் தான் இப்போது உதயநிதியோடு ரொம்ப நெறுக்கமாக பழகி கொண்டிருக்கிறார். எனவே, அவரிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்போது தான் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு, அவர் செய்த உதவியாக இருக்கும்.

குறிப்பாக, உதயநிதியோடு படம் சம்பந்தமாக கமல் பேசும் போது, கோவை தெற்கு தொகுதி பிரச்சனையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

அமைச்சர்களை தாண்டி, பவராக இருப்பவர் உதயநிதி தான். நான் சட்டமன்றத்தில் நேரில் பார்க்கிறேன். முதல்வருக்கு வணக்கம் வைப்பதை விட, உதயநிதிக்கு தான் அனைவரும் முதலில் வணக்கம் வைக்கிறார்கள்.

தென்காசியில் நடந்த நவீன தீண்டாமை மிகவும் கண்டிக்கதக்கது. சாதி மறுப்பு பேசி கொண்டிருக்கின்ற தமிழகத்தில் இது போன்ற சம்பவம் வேதனையானது. இந்த போக்கு மாற வேண்டும்.

நாங்கள் மக்களுக்காக உழைக்கின்ற மோடி அவர்களின் பின்னால் இருப்பதால் நாங்கள் "மோடி மாடல்" என்று சொல்லிக் கொள்கிறோம். ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த மாதிரி பெயர் வைத்து கொள்கிறார்கள். இதனால் தான், கோவையில் "காவி மாடல்" என்று போஸ்டர் ஒட்டப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...