கோவையில் நாளை 1530 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் நாளை 1,530 இடங்களில், நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில், இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளை (18.09.2022) 1,530 இடங்களில் கொரோனாதடுப்பூசி முகாமில் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நாளை (18.09.2022) 1,530 இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம், நடத்தப்படவுள்ளது. கிராம பகுதிகளில் 1,081 இடங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 340 இடங்களிலும், நகராட்சிகளில் 109 இடங்களிலும் முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி 1.67 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே இலவசமாக போடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாம் குறித்துமாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, நாளை நடைபெறவுள்ள முகாமில், ஒரு நபர் கூட விடுபடாமல் இருக்கும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பணியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி பிரிவுகள், தனியார் பயிற்சி நிலைய செவிலியர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பலர் ஈடுபட உள்ளனர். அரசு தடுப்பூசி மையங்களில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே அனைவரும் பூஸ்டர் தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...