அண்ணா மார்க்கெட்டில் வாகனத்தை நிறுத்த ரூ.2 மட்டுமே வசூலிக்க மாநகராட்சி அனுமதி அளித்திருந்த நிலையில், ரூ.10 வசூல் செய்யப்பட்டது குறித்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் தொகை ரூ.8, இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.2,000 ஆகியவற்றை வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா மார்க்கெட்டில் அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா மார்க்கெட்டுக்கு காய்கறிகளை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தை மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் நிறுத்துவதற்கு ரூ.10-ஐ கட்டணமாக வசூலித்ததாகவும் அதற்காகரசீது கூட வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்த, இரண்டு ரூபாய் மட்டுமே வசூலிக்க ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மனுதாரர், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, ஈரோடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பூரணி, மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற பார்க்கிங் கட்டணம், 8 ரூபாயை திருப்பி வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு இழப்பீடாக 10,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசூலிக்கப்படும் கட்டண தொகை விபரம் அடங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.