கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட நால்வர் மீது வழக்குப்பதிவு; பவுன்சர்களிடம் அடி வாங்கும் வீடியோ வைரல்…!

ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் தம்பதிகளுக்குக்கான நிகழ்ச்சியில், தங்களையும் அனுமதிக்கும்படி தகராரில் ஈடுபட்ட பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை ரேஸ் கோர்ஸ்பகுதியில் உள்ள பாப்பிஸ் நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை அன்று தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி (Couples Night) நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தம்பதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இதற்கான ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு பலகையையும் வைத்திருந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விலை உயர்ந்த காரில் வந்த ஆண்கள் நான்கு பேர், நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களையும் அனுமதிக்குமாறு ஹோட்டல் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இது தம்பதிகள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று பாதுகாவலர்கள் எடுத்துச் சொல்லி, அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் பாதுகாவலர்களை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களை தாக்கி விட்டு, நாங்கள் யார் என்று தெரியுமா..? எனக் கூறி மீண்டும் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றதாக தெரிகிறது.

இதனால் தற்காப்பிற்காக ஹோட்டல் பவுன்சர்கள், தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் தாக்கி வெளியே அனுப்பினர்.இதையடுத்து அவர்கள் சொகுசு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து பாப்பிஸ் ஹோட்டல்,கணக்காளர் விஷ்வபாரதி (24), ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தகராரில் ஈடுபட்ட லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசியஹோட்டல் நிர்வாகத்தினர், சம்பவத்தன்று வந்த நான்கு பேர் ஏற்கனவே குடி போதையில் இருந்ததாகவும், நடைபெறும் நிகழ்ச்சி தம்பதிகளுக்கானது என்று எவ்வளவு எடுத்து சொல்லியும் தொடர்ந்து உள்ளே அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், உள்ளே அனுமதிக்க அதிக பணம் தருகிறோம் என்று பேசி வந்தவர்கள், ஒரு கட்டத்தில் காரில் இருந்து கத்தியை எடுத்து வந்து மிரட்ட துவங்கினர். இதனால், வேறு வழியின்றி அனைவரின் பாதுகாப்பையும் கருதி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவர்களை தாக்கினர்.

சம்பவம் குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தீவிரமாக போலீசார் தேதி வருவதாக சொல்லப்படும்.நிலையில், இதில், ஜான்சன் என்பவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையின் முக்கிய பகுதியில் உள்ள ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட நபர்கள் அடி வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...