தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள்: பெரியாரின் நினைவிடத்தில் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை..!

சமூக நீதி நாளை முன்னிட்டு, கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி துறையின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் கோட்டயம் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கேரளா: தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு கேரளாவில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தந்தை பெரியாரின் 144வது பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று சமூக நீதி நாளை முன்னிட்டு, கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்தவிழாவில் கேரளா அரசின் சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பி.கே.ஜெயஸ்ரீ, தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையின் அருகே அமைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராதிகா ஷியாம் துணை தலைவர் பி.டி.சுபாஷ், நகராட்சி உறுப்பினர்கள் ராஜசேகரன், இப்ராஹிம் பழையா கடவாய், கவிதா ராஜேஷ், ராஜஸ்ரீ, ரேணுகா, பிஜிமோல், பிரீத்தா ராஜேஷ், சந்திரசேகரன், அசோகன், வைக்கம் வட்டாட்சியர் விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...