தந்தை பெரியார் பிறந்தநாள்: கோவையில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக), திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர், காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


கோவை காந்திபுரத்தில் உள்ளபெரியார் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சி பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம்தந்தை பெரியார் திராவிட கழகம் (தபெதிக) அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை சுற்றியும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும், பெரியார் சிலைக்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன்,திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,சமூக நீதிக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...