ஆழியார் சின்னார்பதி வனகிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்ற வேட்டை தடுப்பு காவலர், கவியருவி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பாம்பு கடித்து மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே பாம்பு கடித்து வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே ஆழியார் சின்னார்பதி வனகிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (29). இவர் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல ஆழியார் கவியருவி அருகே உள்ள வில்லோனி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது, எதிர்பாராத விதமாக பச்சை பாம்பு ஒன்று ரவிச்சந்திரனை கடித்ததாக தெரிகிறது.
பின்னர், அருகில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அவரை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், பச்சை பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக, அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வனத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.