இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் விசைத்தறிகளுக்கு குறைந்த கட்டணம் விதிப்பு - கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின்சார வாரியத்திற்காக 25 விழுக்காடு மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்கிறோம், அதனை 50 விழுக்காடாக உயர்த்துவதற்கான நோக்கத்திலேயே மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தபட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கோவை: மின்சார கட்டணத்தை வைத்து அரசியல் செய்வதாக, கோவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.



முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை, கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில் துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,



தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்கனவே கடன் சுமை இருந்தும், கடந்த 15 மாதங்களாக தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதற்கு காரணம், முதலமைச்சர் மட்டும்தான். இழுத்து மூட இருந்த மின்சார வாரியத்திற்கு 3500 கோடி மானியத்தை ஒப்புதல் அளித்து, கூடுதலாக 4000 கோடி அளவில் வழங்கி மின்சார வாரியத்தை காப்பாற்றி உள்ளோம்.

மின்சார வாரியத்திற்காக 25 விழுக்காடு மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்கிறோம். 2006, 2011 மின் உற்பத்தி திட்டங்கள் தவிர கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், புதிய திட்டங்கள் கொண்டு வராமல், கூடுதலாக 12 ஆயிரம் கோடி வட்டியை கட்டியுள்ளனர்.

வாங்கப்பட்ட கடனுக்கு மட்டும் துறைவாரியாக கூடுதலாக நிறுவுதலன் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகளை முதல்வர் வழங்கினார். வரும் டிசம்பர் மாதம் 800 மெகாவாட் உற்பத்தியை தொடங்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது. விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் தமிழகத்தில் தான் விதிக்கப்படுகிறது.

மின் உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஆதாரங்கள் டெண்டர் விடப்படும். தடையில்லாத மின்சாரம் அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை



தமிழ்நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர்களது சொத்து மதிப்பு என்ன? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன? ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த வருமானங்கள் எங்கிருந்து வந்தது? இத்தனை மடங்கு சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் கடந்த ஆட்சியில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன்படி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நீதிமன்றம் சென்று அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கலாம். வருமானம் எப்படி பல நூறு மடங்கு வருமானம் வந்தது என்று அங்கு சொல்லலாம். இதில், எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் மீனா லோகு, கல்விக்குழு தலைவர் மாலதி, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...