பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - கோவை மாநகர், மாவட்ட போலீசார் 8 பேருக்கு அண்ணா பதக்கம்..!

கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் - பாலு, பிரபு உள்பட 8 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.


கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பதக்கம் பெறும் போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் 100 பேர், இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 8 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

கோவை மாவட்ட போலீஸ் தொலைதொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், மாநகர ஆயுதப்படை பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங், சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ருக்மணி, காவல் பயிற்சிப்பள்ளி எஸ்.ஐ.,க்கள் பாலு, பிரபு மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, ராமலஷ்மி, ஜெயஸ்ரீ ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேரறிஞர் அண்ணா பதக்கத்துடன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...