கோவை காரமடையில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் தப்பியோடிய திருடன்..!

காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் ஆளில்லாத நேரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகேயுள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயன்ற நிலையில் அலாரம் ஒலித்ததால் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது.

இப்பகுதியில் மேட்டுப்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி கிளையின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

இதனால் அந்த ஏ.டி.எம்.மில் எப்போதும் அதிகளவில் பணம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம்-க்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனால் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது. அலாரம் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்து சுதாரித்துக் கொண்ட அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து வங்கி மேலாளருக்கு வந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் கொள்ளை முயற்சி குறித்து அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மக்கள் தொகை அதிகம் உள்ள இடத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...