கடந்த வாரம் 15 கிலோ தக்காளி பெட்டியின் விலை 500 ரூபாய் வரை ஏலம் போன நிலையில், இந்த வாரம் ரூ.250 முதல் ரூ.400 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவை: கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் நாட்டு தக்காளி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளி 500 ரூபாய் வரை வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.

ஆனால், இன்று 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளி 250 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.
கிணத்துக்கடவு சந்தையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுத் தக்காளியின் விலை கடுமையாக சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.