அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை - 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு..!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில், இன்று காலை முதல் கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, கே.சி.பி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீடு, ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வீடு, சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் குவிய துவங்கியதால், அனுமதி மறுத்த காவல் துறையினருக்கும் அங்கு திரண்டிருந்த அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இதனையடுத்து சூழலை கட்டுப்படுத்தும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், எஸ்.பி வேலுமணி வீட்டில் 8 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.



இதேபோல், எஸ்.பி. வேலுமணியின் நெருங்கி நண்பர் மற்றும் நமது அம்மா நாளிதழின் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் நடைபெற்ற சோதனை முடிவுற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர்.



சோதனை முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வீட்டுக்கு முன் நின்றிருந்த அவரது ஆதரவாளர்களை சந்தித்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே, சந்திரசேகர் இல்லத்திற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான சி.ஆர்.கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...