செப்டம்பர் 25 மற்றும் 28ம் தேதிகளில் கோவை வடக்கு மண்டல பகுதியிலும், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் மேற்கு மண்டல பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி கடைபிடிக்கபடவுள்ள, உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, கோவையில் செப் 25-ஆம் தேதி முதல் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் துவக்கபடவுள்ளது.
ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி ஃபாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28. இவரை நினைவு கூறும் வகையில், 2007 - ம் ஆண்டில் இருந்து உலக நாடுகள் முழுவதும் செப்டம்பர் மாதம் 28 - ஆம் தேதி அன்று ‘சர்வதேச ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளன்று, வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கவும் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும், இந்த நாளன்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும்தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வளர்ப்பு நாய்கள் மற்றும் பொதுமக்களால் உணவு வழங்கப்பட்டு வரும் தெரு நாய்களுக்கு, இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட உள்ளது.
கோவை மாநகராட்சியால் பணியமர்த்தப்பட்டுள்ள, 'ஹியூமன் அனிமல் சொசைட்டி'(Humane Animal Society) என்ற தொண்டு நிறுவனம் மூலம் வரும் 25 மற்றும், 28ம் தேதி வடக்கு மண்டல பகுதிகளில் மற்றும் செப்., 30 மற்றும் அக்டோபர்., 2ல் மேற்கு மண்டல பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, சீரநாயக்கன்பாளையம் கருத்தடை மையத்தில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமும் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களுக்கு, 93661 27215, 97915 32266, 98437 89491 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் வெறிநாய் கடி மூலம் ஒருவர் கூட இறக்க கூடாது என்ற இலக்கை நோக்கி உலகளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.