கோவை வெரைட்டி ஹால் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50,000 பணத்தை அவ்வழியாக சென்ற அன்பழகன், ஜெகன் மற்றும் செல்லபாண்டி ஆகியோர் மாநகர காவல் ஆணையாளரிடம் நேரடியாக ஒப்படைத்துள்ளனர்.
கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோடு அடுத்த தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே யாரோ ஒருவர் ரூ.50,000 பணத்தை தவற விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற கோவைராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (42), கணுவாய் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (20) மற்றும் காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய மூவரும் அவ்வழியாக சென்ற போது, கேட்பாரற்று கிடந்த பணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து தவற விட்டவர்கள் எவராவது வருகிறார்களா..?என அந்த இடத்தில் காத்திருந்த மூவரும், யாரும் வராததால் பணத்தை கோவை மாநகர காவல் ஆணையாளரைநேரில் சந்தித்து ரூ.50,000 பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த அன்பழகன், ஜெகன் மற்றும் செல்லபாண்டி ஆகியோரின் நேர்மையை பாராட்டிய காவல் ஆணையர், பணத்தை உரிய நபர்களிடம் ஒப்படைக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.