போத்தனூரில் மயங்கி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி…!

போத்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ் (49) பணியின் போது மயங்கி விழுந்ததால், அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சுந்தராபுரத்தை அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). இவர் கடந்த 8 ஆண்டுகளாக போத்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல கோவிந்தராஜ் பணிக்குச் சென்ற நிலையில், மதியம் 2 மணியளவில், திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, சக ஊழியரான கலையரசன் என்பவர் கோவிந்தராஜின் மனைவி பூங்கோடிக்கு செல்போனில் அழைத்து கோவிந்தராஜன் மயங்கி விழுந்ததாகவும், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பூங்கோடி கோவை அரசு மருத்துவமனைச் சென்று மருத்துவர்களிடம் விசாரித்த போது, கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...