கோவை வடவள்ளி அருகே வீடு புகுந்து கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை பறிப்பு - கொள்ளையனை கைது செய்த போலீசார்..!

வடவள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.


கோவை: வடவள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்துமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து, இந்துமதி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார்.

விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாண்டியன் (31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...