பருவமழைக்கு பின் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தல்

யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது என்றும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறை அறுவுத்தியுள்ளது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள, வால்பாறையில், பருவமழைக்கு பின் வன வளம் பசுமையாக இருப்பதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வரும் யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.



இவ்வாறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைகளை கடப்பதும், சில நேரங்களில் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பல நாட்கள் முகாமிடுவது அதிகரித்துள்ளது.

சமீபத்தில், வால்பாறை பகுதிகளில் அதிகரித்துள்ள யானை நடமாட்டம் குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், வால்பாறையில் பருவமழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.



பகல் நேரத்திலேயே யானைகள் சாலைகளை கடந்து செல்வதால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுபவர்கள், வாகன முகப்பு விளக்குகள் சரிபார்த்து விட்டு பயணத்தை தொடங்க வேண்டும்.

யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்

குறிப்பாக, யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்க செல்வது, யானைகள் மீது கற்கள் எரிவது, சத்தம் எழுப்புவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வன உயிர்களைபொதுமக்கள் துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...