ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - கோவையில் கூடுதல் வன பாதுகாப்பு அதிகாரி தகவல்..!

வனத் தியாகிகள் தினத்தையொட்டி, கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் சேவாசிங், வனத் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஎனக்கோவையில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு காவலர் சேவாசிங் தெரிவித்துள்ளார்.

வனங்கள் பாதுகாப்பு, தீத்தடுப்பு, வேட்டைத்தடுப்பு உள்ளிட்ட பணிகளின் போது உயிரிழந்த வனத்துறையினரை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் செப்., 11ம் தேதி வனத் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இந்தாண்டும் கோவை கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் நேற்று வனத்தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த, 2017 முதல் தமிழக அரசு வனத்தியாகிகள் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்தாண்டு, நான்கு பேர் வனப்பணியின்போது உயிரிழந்துள்ளனர்.

வால்பாறையில் தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிக்கு, உணவுக்காக மிருகங்களை வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில வனப்பணிகளுக்கான மத்திய பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மற்றும் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...