கோவை நாகராஜபுரம் - பேரூர் சாலையில் 5 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை - போலீசார் விசாரணை….!

கோவை வேடப்பட்டியை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் பாபு ராஜ் (47) என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை நாகராஜபுரம் - பேரூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, அடையாளம் தெரியாதநபர்கள் சிலர் உணவில் விஷம் கலந்து நாய்களுக்கு வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதனை உண்ட 5 தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதையடுத்து கோவை வேடப்பட்டியை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் பாபுராஜ் (47) என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாகவடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் திருடுவதற்காக நோட்டமிட்ட நபர்கள் யாரேனும் நாய்களுக்கு விஷம் வைத்தனரா? அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...