கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று சோமனூர் பகுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அந்தந்த பகுதிகளில் பொதுக்குழு கூட்டி விவாதித்து மின் கட்டண உயர்வுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று சோமனூர் பகுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மின்வாரியமும் ஒழுங்குமுறை ஆணையமும் 30% சாதா விசைத்தறியாளர்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதனால் பல ஆயிரக்கக்கான விசைத்தறியாளர்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, தமிழக அரசு கொண்டு வந்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை சாதா விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முழுமையாக கட்டாமல் இருந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பில் அந்தந்த பகுதிகளில் பொதுக்குழு கூட்டி விவாதித்து வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.