கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - பொதுமக்களுடன் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டம்..!

கருமத்தம்பட்டி - அன்னூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை, சோமனூர் சாலைக்கு மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கருமத்தம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - அன்னூர் இடையேயான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை சோமனூர் சாலைக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை சோமனூர் சாலைக்கு மாற்றுவதற்கு அப்பகுதி மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத டாஸ்மாக் கடையை, ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சோமனூர் சாலையில் டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு புதிதாக அமைய உள்ள மதுபான கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து அங்கு வந்த டாஸ்மாக் வட்டாட்சியர் அலமேலு மங்கை, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடை தற்போதைக்கு மாற்றப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்ன எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...