கோவையில் உலக முதலுதவி தினத்தன்று உலக சாதனை...! 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி.

மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் 5,386 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.



கோவை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவையில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு, முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி அளித்து உலக சாதனை படைக்கப்பட்டது.



உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில்

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதலுதவி பயிற்சி அளிக்கு சாதனை முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தனியார் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



இதில், அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள், குமரகுரு பொறியியல், அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவ - மாணவிகள், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த சாதனை நிகழ்ச்சியில், மொத்தம் 5,386 மாணவ -மாணவிகளுக்கு, மயக்கத்தில் இருப்பவருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.



இதனைஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பினர் நேரில் பார்த்து உலக சாதனையாக பதிவு செய்து விருதுகளையும் வழங்கினர். மேலும், இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்விற்கு, மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த சாதனையானது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவதாக, தெரிவித்தார்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...