கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் “மோடி கபடி லீக்” என்ற பெயரில் கபடி போட்டிகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத் தலைவர் ராஜேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கபடி கழகத்தோடு இணைந்து “மோடி கபடி லீக்” என்ற பெயரில் கபடி போட்டிகளை நடத்தப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் கபடி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1லட்சமும், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம், 4-ம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கான இறுதிப்போட்டி மதுரையில் வரும் செப் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இறுதி போட்டியில் மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது, என்றார்.
பேட்டியின் போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் நவீன் குமார், மாவட்ட துணை தலைவர் பிரனேஷ், மாவட்ட செயலாளர்கள் ராம்போ கோகுல், கிஷோர், குமார், வெங்கட் சுப்பு, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் சவுமியா ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.