கோவையில் 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நண்பர்களை சந்தித்து முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..!

1972 ஆம் ஆண்டு கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பள்ளியில் சந்தித்து வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டனர்.


கோவை: 1972 ஆம் ஆண்டு கோவை துாய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை பொன்விழா ஆண்டில் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொன்விழா கொண்டாட்டத்தில், தாளாளர் ஹென்றி டேனியல் மற்றும் 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

"பள்ளி படிப்பு முடித்தும், ஐம்பது ஆண்டுகளாக, நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதும், இதுபோன்ற சந்திப்புகளை அவ்வப்போது நடத்தி, பள்ளி நாட்களை நினைவுப்படுத்திக் கொள்வதும், மகிழ்ச்சியான தருணங்கள். இந்நாளில், தங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை மறக்காமல் நன்றி கூறுவதோடு, அவர்களை கவுரவப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

இதுபோன்ற கூட்டங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். இது உங்களுக்கான நாள் என்பதால், வழக்கமான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் உங்கள் நண்பர்களுடன் வசந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,'' என்று பள்ளி தாளாளர் ஹென்றி டேனியல் பேசினார்.

இந்த பொன் விழா நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர்களான தாமரைச் செல்வன், ரகுநாதன், ஜெரோம் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து, தங்களது பள்ளி கால நினைவுகளை அசைபோட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...