பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு மற்றும் கோவை மாநகராட்சியின் எச்சரிக்கையை மீறி கோவையில் திமுகவினர் மீண்டும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளது, மக்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று திமுகவினரால் ஓட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவில், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல...?" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டரானது தற்பொழுது மக்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு மற்றும் கோவை மாநகராட்சியின் எச்சரிக்கையை மீறி கோவையில் திமுகவினர் மீண்டும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளது, மக்கள் மத்தியில் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், கோவைக்கு வருகை தந்துள்ள தமிழக நிதி அமைச்சரை வரவேற்கும் விதமாக பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில், கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல...?" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் முனுமுனுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில், ஆளும் கட்சியினரே நீதிமன்ற உத்தரவை மற்றும் மாநகராட்சி ஆணையரின் உத்தரவை மீறி போஸ்டர்கள் ஓட்டுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இந்த போக்கை கோவை திமுக பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.