தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த பட்டியலை ஆட்சியரிடம் வழங்கிய கோவை அதிமுக எம்.எல்.ஏக்கள்..!

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில், 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த பட்டியலின் தொகுப்பை ஆட்சியர் சமீரனிடம் வழங்கி, அது குறித்து விளக்கமும் அளித்தனர்.


கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.



சமீபத்தில் கோவை ஈச்சனாரி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும், மாவட்ட ஆட்சியரிடம் இன்று அவரவர் தொகுதி பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.



இதனையடுத்து, 9 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமும் அளித்தனர்.



கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆட்சியரை சந்தித்து அவர் தொகுதி பிரச்சினைகளின் தொகுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...