கோவை ராமநாதபுரம் பாலம்: 40 கிமீ வேகத்தில் செல்ல இந்த பாலத்தின் சாலை கட்டமைப்பு பாதுகாப்பானது - ஐ.ஐ.டி குழுவினர் பரிந்துரை

பாலத்தில் சுங்கம் மார்கமாக வளைவுக்கு முன் 150 மீட்டர் தூரத்தில் வேகம் காட்டி பொருத்தவும், இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட க்ராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை. அதேபோல, வடிவமைப்பு வேகம் மணிக்கு 40 கிமீ என கருதப்படுகிறது, இந்த வேகத்தில் செல்லும் போது .தற்போதைய சாலை சீரமைப்பு பாதுகாப்பானது.



கோவை: கோவை-திருச்சி சாலையில் 3.15 கி.மீ தூரத்திற்கு ரூ.238 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஜூன் 11 ம் தேதி திறக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட மறுநாளே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து இறந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு பேர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.

தொடர் விபத்துகள் காரணமாக, அங்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து விபத்துகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. எனவே, பாலத்தின் வடிவமைப்பை ஆய்வு செய்து, திருத்தங்கள் இருந்தால் பரிந்துரைக்க, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) கட்டமைப்பு பொறியியல் துறையின் நிபுணர்களின் உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியது.

அதன்படி, ஐஐடி யில் இருந்து வந்த குழுவினர், பாலத்தின் கட்டமைப்பு மற்றும் விபத்துகள் ஏற்பட சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர். விரைவில், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில், இன்று ஆய்வு அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சிவில் இன்ஜினியரிங் துறையின், இணைப் பேராசிரியர் முனைவர் கீதாகிருஷ்ணன் ராமதுரை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி, வேகமாக வாகனம் இயங்கியதே விபத்துக்கு காரணம் என்றும் எங்கெல்லாம் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

- கான்கிரிட் வேகத்தடை கன ரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினாலும் இரு சக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட க்ராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை.

- ரப்பர் தடுப்புகள் இருசக்கர வாகனத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி வேக உராய்வை தன்னுள் ஈர்க்கும் - இதனால் வேகம் மட்டுபடுத்தப்பட்டு விபத்து நடக்காது.

- பாலத்தை மீண்டும் இடித்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதுவரை நடந்த இரு சக்கர வாகன விபத்துகள் அனைத்தும் அதிக வேகமாக வந்ததால் நடைபெற்றதுள்ளது என்று அறிவிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...