ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உட்பட 4 பேர் கைது

சொகுசு காரில் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் உட்பட 4 பேர் மீது ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் ஒரு இளம் பெண் உட்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்துள்ளனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.



பின்னர் போலீசாரின் சோதனையில் காரில் 21 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சொகுசு காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களது பெயர் கெளதம், உதயகுமார், தினேஷ் மற்றும் சுருதிகா என்பதும் நால்வரும் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கார் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.



தொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.



மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 21 கிலோ 300 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...