கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முனைப்புடன் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை பரப்பினை அதிகரிப்பது தொடர்பான பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் லட்சியமான 'பசுமை தமிழ்நாடு' திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் தலைமையில் அதிகாரிகளை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இக்குழுவானது வனப்பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப்பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல் விவசாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்பினை அதிகரிக்க மரம் வளர்த்தல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை தனியார் பங்களிப்போடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முனைப்புடன் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு இன்று ஆட்சியர் அலுவலகத்தில்மேற்கொள்ளப்பட்டது.



இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...