வ.உ.சி 151வது பிறந்தநாள்: கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வ.உ.சி இழுத்த செக்கிற்கு மலர் தூவி மரியாதை..!

கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



கோவை: வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள்- மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனாரின் செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி.



இந்திய விடுதலையில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. அவ்வாறு, சுதந்திரத்திற்காக வீறுகொண்டு எழுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் வ.உ.சிதம்பரனார்.

சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் என்று போற்றப்படும் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் உலகநாதர் மற்றும் பரமாயி அம்மாளுக்குமகனாக பிறந்தார்.

இன்று தமிழகம் முழுவதும் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைப்பினர்,பள்ளி கல்லூரிகளில் அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பல்வேறு பள்ளிகளில் கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள வ. உ சிதம்பரனாரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...