கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவை: வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள்- மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனாரின் செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்திய விடுதலையில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. அவ்வாறு, சுதந்திரத்திற்காக வீறுகொண்டு எழுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் வ.உ.சிதம்பரனார்.
சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் என்று போற்றப்படும் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் உலகநாதர் மற்றும் பரமாயி அம்மாளுக்குமகனாக பிறந்தார்.
இன்று தமிழகம் முழுவதும் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைப்பினர்,பள்ளி கல்லூரிகளில் அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு பள்ளிகளில் கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள வ. உ சிதம்பரனாரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.