கோவையில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எச். ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்

இன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலமானது, தெப்பக்குளம் மைதானத்தில் தொடங்கி காந்திபார்க் வழியாக சென்று முத்தண்ணன் குளத்தில் நிறைவடைந்து.



கோவை: இன்று கோவையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாஜக செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் பெற்றது. இதில், இந்து முன்னணி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா, பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய எச்.ராஜா, கடந்த இரண்டு வருடங்களாக சீன வைரஸால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இயலாமல் போனது. சீன பொம்மைகள், சீன பட்டாசுகள் அனைத்தும் ஆபத்தானது.வினா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் வரை அனைத்தும் தரமற்றவை தான்.

கம்யூனிசம் என்று சொன்னாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது தான். மோடி பிரதமராக இல்லை என்றால் கோவிட் காலத்தில் 50 கோடி பேர் இறந்திருப்பார்கள். மேலும், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர், அடுத்த முதல்வராக வர கூடாது வர விட மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொள்வோம். தேச விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுள்ளது. இந்த மாநில அரசாங்கம் மூளை கெட்டு திரிய கூடாது.

சமூக வலைதளங்கள் வந்தபின் உளறுவது அதிமாகி விட்டது. பலரும் பலவற்றை உளறி வருகின்றனர். இங்கு இந்து விரோதிகள் தேச விரோதிகள் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் பாரத நாடு முழுமைக்கும் தலைவர் சிவன் என்று அர்த்தம். இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள். பாரத மாதாவிற்கு நாம் என்ன குடும்ப காட்டுபாடா செய்துவிட்டோம்? இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்.



ஊடகங்கள் அனைத்தும் பயந்தாங்கோலி ஆக உள்ளனர். இந்த அரசாங்கம் கிறித்துவ பாதிரியார் ஜகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். NGO எல்லாம் கலெக்சனுக்காக தான் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் இருந்து மதுரை- அங்கு தான் டேவிட்சன் ஆசிர்வாதம் அதிகாரியாக இருந்தார்.

வெடி மருந்து குன்றின் மீது தமிழ்மக்கள் அமர்ந்துள்ளனர். ஏனென்றால், இங்கு திராவிட மாடல் உள்ளது. அரசியல்வாதிகள் மதத்தினுள் வராமல் இருந்தால் ஆதினங்கள் அரசியல் பேச மாட்டார்கள். திரவிடியன் ஸ்டாக் என்பதே மானங்கெட்டவர்கள் தான். மதமாற்றம் என்பது தேசிய அபாயம் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

போலீஸ்காரர்கள், இந்துகள் 70% ஒரு இடத்தில் இருந்தால் செண்சிடிவ் ஏரியா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஆனால், நாம் 100% இருந்தாலும் செண்சிடிவ் இல்லை. இந்து மதத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. வேற்றுமை என்பது செய்தொழிலில் உள்ளது என்று கண்ணன்(தெய்வம்) கூறியுள்ளார். இந்துவில் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை.

இன்று விநாயகர் சதுர்த்திக்கு கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல் வீடுவீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விட கூடாது என கூற வேண்டும். இது ஒரு பேரியக்கமாக உருவாக வேண்டும்.

கனல் கண்ணன் "இனிமேல் தாண்டா உள்ளது" என்று கூறியுள்ளார். கனல் கண்ணனை வெட்கம் கெட்டவர் தான் கைது செய்வார்கள். திராவிடர்கள் கருத்து திருடர்கள். மேலும், நாத்திகம் ஒன்றும் ஈவெரா கண்டு பிடித்தது இல்லை. இன்று காட்டியிருக்கிற ஒற்றுமையை நாம் தொடர்ந்து காட்ட வேண்டும்", இவ்வாறு அவர் பேசினார்.



இந்த ஊர்வலமானது தெப்பக்குளம் மைதானத்தில் தொடங்கி காந்தி பார்க் வழியாக சென்று முத்தண்ணன் குளத்தில் நிறைவடைந்து.



பின்னர், பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைக்கப்பட்டது.



இந்த ஊர்வலத்தில் இந்து முன்னனியினர் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு மாணவர்கள் சிலம்பம் சுழற்றியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...