சத்குரு பிறந்தநாளுக்கு ட்விட்டரில்‌ அரசியல்‌ தலைவர்கள்‌, பிரபலங்கள்‌ வாழ்த்து..! தேசிய அளவில் ட்ரெண்டிங்!

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள்‌ மட்டுமல்லாமல்‌, ஈஷா தன்னார்வலர்கள்‌, பொதுமக்கள்‌ என லட்சக்கணக்கான மக்கள்‌ சத்குருவை வாழ்த்தி ட்வீட்‌ செய்தனர்‌.



கோவை: ஈஷா நிறுவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்த நாளான செப்டம்பர்‌ 3-ம்‌ தேதி, நதிகளுக்கு புத்துயிர்‌ ஊட்டும்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஈஷா யோகா மையத்திலும்‌, அதனைசுற்றியுள்ள கிராமங்களிலும்‌ வெகு விமரிசையாக அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மேலும்‌, சத்குருவுக்கு அரசியல்‌ தலைவர்கள்‌, பிரபலங்கள்‌ என பல்வேறு தரப்பினரும்‌ வாழ்த்து தெரிவித்தனர்‌.

அதன்படி, மத்திய பிரதேச முதல்வர்‌ ஷிவராஜ்சிங்‌ சவுகான்‌, கர்நாடக முதல்வர்‌ பசவராஜ்‌ பொம்மை, உத்தரகாண்ட்‌ முதல்வர்‌ புஷ்கர்‌ சிங்‌ தமி, காங்கிரஸ்‌ மூத்த தலைவரும்‌ முன்னாள்‌ பாராளுமன்ற உறுப்பினருமான கமல்நாத்‌, மத்திய அமைச்சர்கள் - நிதின்‌ கட்கரி, ஷோபா, ஹர்ஷவர்தன்‌ உள்ளிட்ட மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்‌ பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத்‌, பாடலாசிரியர்‌ பிரஷூன்‌ ஜோஷி, பாரம்பரிய நடனக்கலைஞர்‌ சோனல்‌ மான்சிங்‌, நடிகர்‌ சந்தானம்‌, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும்‌ தங்களது ட்விட்டர்‌ பக்கங்களில்‌ வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்‌.

பிரபலங்கள்‌ மட்டுமல்லாமல்‌, ஈஷா தன்னார்வலர்கள்‌, பொதுமக்கள்‌ என லட்சக்கணக்கான மக்கள்‌ ட்விட்டரில் #HappyBirthdaySadhguru

#RiverRevitalizationDay ஆகிய டேக்‌ உடன்‌ சத்குருவை வாழ்த்தி ட்வீட்‌ செய்தனர்‌. இது தேசிய அளவில்‌ முதல்‌ இடத்தில்‌ ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...