சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்தநாள்: காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 2.5 லட்சம் மரங்கள் நடவு..!

செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் பிறந்தாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


கோவை: ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்தநாளான இன்று, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 2.5 லட்சம் மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டன.

செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் பிறந்தாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 3 நாட்களாக 2.5 லட்சம் டிம்பர் மரங்களை வழங்கி தங்கள் நிலங்களில்நடவைத்து வருகின்றனர். மொத்தம் 130 விவசாயிகளின் பண்ணைகளில் 2 லட்சத்து 52 ஆயிரம் மரங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரையில் நடப்பட்டுள்ளது.

காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் விவசாயிகள் மூலமாக மரம் நடும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. காவேரி வடிநில பகுதிகளில் 242 கோடி மரங்களை நடும் இலக்கை நோக்கி, காவேரி கூக்குரல் இயக்கம் முன்னேறி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 35 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.



தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பல மடங்கு அதிகரிப்பதுடன் மண் வளமும், நீர் வளமும் அதிகரிக்கிறது.

மழைக்காலத்தில் அதிக அளவில் மரங்கள் நடுவதற்கு தேவையான நாற்று உற்பத்தி மற்றும் மரம் நடுவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக நேரடியாகவும் இணைய வழியிலும் பல்வேறு வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து, அவர்களின் மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்து, நடவு செய்ய ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய செயல்களை செய்து வரும் ஈஷா நிறுவனம், தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மாபெரும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...