கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் நாயை கொடூரமாக துன்புறுத்தி கொன்ற ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது..!

சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த பணியாளர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்துள்ளது. சமந்தப்பட்ட, இருவரையும் கைது செய்த சரவணம்பட்டி போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: சரவணம்பட்டி அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் நாயை குச்சியால் அடித்து கொடூரமாக துன்புறுத்திய வீடியோ வைரலான நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரவணம்பட்டி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை இருவர் குச்சியால், அடித்து துன்புறுத்தும் பதைபதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

நாயை துன்புறுத்தும் இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இது தொடர்பாக மனிதநேய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் ( Humane Animal Society) சார்பில் சரவணம்பட்டி காவல் நிலையத்தில், நாயை தாக்கும் அந்த வீடியோவை ஆதாரமாக கொடுத்து புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து நம்மிடம் பேசிய Humane Animal Society தலைவர் மினி வாசுதேவன், கோவையில் உள்ள இதுபோன்ற பெரு நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகளில் நாய்கள் துன்புறுத்தப்படுவது இது முதல்முறையல்ல என்றும் இது போன்ற இரக்கமன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தை நாம் தொடர்பு கொண்ட போது, "நாயை தாக்கியவர்கள், கல்லூரியை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள், சுத்தம் செய்யும் பணிக்காக ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாக வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள்.

எங்களது கவனத்திற்கு வராமல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியான உடனே, இது தொடர்பாக அந்த ஒப்பந்த நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதது மட்டுமல்லாது, இது குறித்து கண்டனம் மற்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். உடனடியான, சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஒரு போதும் இது போன்ற மனிதாபமற்ற செயல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவங்களை மறைக்கும் எண்ணமோ இல்லை இதை சாதரணமாக கடந்து செல்லும்போக்கு எங்கள் நிறுவனத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எங்கள் கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக, அவற்றுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய முயற்சி எடுத்துளோம்", என்றனர்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சரவணம்பட்டி போலீசார், கல்லூரியில் விசாரணை மேற்கொண்டு, நாயை தாக்கிய அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பிரான்ஜில் (24) மற்றும் பைஜின் (32) ஆகியோரை விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் மீது, ஐபிசி 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...