பிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து லட்சுமி விலாஷ் வங்கி புதிய செயலி அறிமுகம்


லட்சுமி விலாஷ் வங்கி மிசன் பின்பிட் என்னும் ஒரு புதிய ஸ்மார்ட் போன்களுக்கான செயலியை பிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. 

இந்த செயலி மூலம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மூலதனத் திட்டங்களை வழங்க உள்ளது. மேலும் தனிமனித சொத்து நிர்வாகத்திற்கான சேவைகளையும் இதன் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் முதலீடுகளை இந்த செயலியின் மூலம் லட்சுமி விலாஷ் வங்கியின் வாடிக்கையாளர்கள் எழிதாக மேற்கொள்ளலாம்.

இதுகுறித்து லட்சுமி விலாஷ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பார்த்தசாரதி முகர்ஜி கூறியதாவது:-

லட்சுமி விலாஷ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தங்களது முதலீடுகளை கையாலுவதற்கு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் முதலீடுகளை எழிதாக மேற்கொள்ளலாம். இந்த செயலியானது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் மொபைல் வேலட்டாகவும் செயல்படும். வங்கி மற்றும் இந்த சேவையில் எங்களின் சேவைகளை விரிவாக்குவதற்கு இந்த செயலி மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

லட்சுமி விலாஷ் வங்கியின் சில்லரை வங்கி பிரிவின் தலைவர் ஏ.ஜே.வித்யாசாகர் கூறுகையில், பண பர்வர்த்தனையின் எதிர்காலம் என்பது டிஜிட்டல் முறையிலேயே நடக்கும். இதைக் கருத்தில் கொண்டு எங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. நாங்கள் சமீபத்தில் எங்களுடைய மொபைல் போனுக்கான செயலியை அறிமுகம் செய்தோம். அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிஸ்டம் உடன் இணைந்து செயல்படுவது மூலம் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்த முடியும். பிஸ்டம் நிறுவனம் எங்களுடைய இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகிறது" என்றார்.

பிஸ்டம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான சுப்ரமண்யா எஸ்.வி கூறுகையில், லட்சுமி விலாஷ் வங்கியுடன் இணைந்து மிஷன் பின்பிட்டை வழங்குவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். இந்த சேவை நாடுமுழுவதும் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்களுடைய நிறுவனம் புதிய நிறுவனமாக இருந்தாலும் லட்சுமி விலாஷ் வங்கியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சாதனையாகும். இதன் மூலம் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் முதலீடு வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகளை எங்கள் வாடிக்கையாளர்களுககு வழங்குவதில் மிகவும் உறுதுணையாக இருக்கும்" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...